7 கோடி வருடங்கள் பழமையான டைனோசர்

பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடு 7 கோடி வருடங்கள் பழமையானது என தெரியவந்துள்ளது

by Bella Dalima 08-03-2024 | 5:09 PM

Colombo (News 1st) பிரான்ஸில் 2022 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் சுமார்  7 கோடி (70 மில்லியன்) வருடங்கள் பழமையானது என தெரியவந்துள்ளது. 

பிரான்ஸின் தெற்கில் உள்ள க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ளது மோன்டோலியர் (Montouliers) காட்டுப் பகுதியில் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 

இப்பகுதியை சேர்ந்த தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Boschetto) தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்ட போது இதனைக் கண்டறிந்தார். 

2022 இல் டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, அந்த மலைப்பகுதியில் புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டார்.

இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வை தொடங்கினர்.

An almost complete dinosaur skeleton found connected from its hind skull to its tail has been discovered in Montouliers, France.

ஆய்வுப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்தால், புதைபொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால், அப்பகுதி முழுவதையும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆய்வு இரகசியமாக நடத்தப்பட்டது.

சுமார் 2 வருட காலம் பல முறை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட பல்வேறு ஆய்வில், டேமியனால் கண்டறியப்பட்ட புதைபடிமம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை டைனோசரின் எலும்புக்கூட்டின் 70% பாகங்கள் என தெரிய வந்தது.

The massive fossil was discovered in May 2022 when a collapsed cliff edge had left a bone exposed.

அது சுமார் 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (Titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த டைட்டனோசர் எலும்புக்கூடு, முற்றிலுமாக இணைக்கப்பட்டு க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

Damien Boschetto (left) and Jean-Marc Veyssières (right) are members of the Archaeological and Paleontological Cultural Association with the Cruzy Museum, where the fossil is now held.