உலகின் சிறந்த காபி (Coffee) எது தெரியுமா?

உலகின் சிறந்த காபி (Coffee) எது தெரியுமா?

by Bella Dalima 08-03-2024 | 5:40 PM

Colombo (News 1st) TasteAtlas என்ற நிறுவனம் உலகின் சிறந்த காபியின் பட்டியலை தயாரித்து வௌியிட்டுள்ளது. 

குரோஷியாவை தளமாகக் கொண்ட இந்நிறுவனம் உலகின் பாரம்பரிய உணவுகள், சமையல் குறிப்புகள், உணவு மதிப்பீட்டு விமர்சனங்கள், உணவுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வௌியிடல், ஒன்லைன் பயண வழிகாட்டல் போன்றவற்றுக்கு புகழ்பெற்றது. 

இந்நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய 'காபி' தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தி, புகழ்பெற்ற 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலை வௌியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' (Cuban Espresso) முதலிடம் பெற்றுள்ளது. 

இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய 'பில்டர் காபி (South Indian Filter Coffee) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் கிரீஸ் நாட்டின் Espresso Freddo உள்ளது. 

'கியூபன் எஸ்பிரெசோ' என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ ஆகும். இது வறுத்த காபி கொட்டை, பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காபி. 

தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி.