இலங்கை - இந்தியா இடையிலான UPI கொடுக்கல் - வாங்கல் முறைமை ஆரம்பம்

by Staff Writer 12-02-2024 | 2:33 PM

Colombo (News 1st) இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு எனப்படும் UPI கொடுக்கல் - வாங்கல் முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் Online ஊடாக இணைந்துகொண்டனர்.

இந்த கொடுக்கல் - வாங்கல் முறைமையினூடாக திறன்பேசி உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களின் ஊடாக விரைவாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கொடுக்கல் - வாங்கல் முறைமையானது, தற்போது அந்த நாட்டில் பாரிய அளவில் பயன்படுத்தப்படும் முறைமையாக காணப்படுகிறது.