Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன.
பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கை சபை நேற்று கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம், சந்தையில் வட்டி வீதம் வீழ்ச்சியடையும் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.