இலங்கை - தாய்லாந்து இடையில் மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்து

by Staff Writer 03-02-2024 | 10:47 PM

Colombo (News 1st) தாய்லாந்து பிரதமரின் இலங்கை வருகையையொட்டி   இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட மூன்று உடன்படிக்கைகள் இன்று பிற்பகல் கைச்சாத்திடப்பட்டன

இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை, புதிய விமான சேவை ஆகிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன

இலங்கைக்கும் தாய்லாந்துக்கு இடையிலான வர்த்தக முதலீட்டு உறவுகளை பலப்படுத்தும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) ஆகியோர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

தாய்லாந்து துணை பிரதமர் மற்றும் வர்த்தக வணிக  உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியொர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இலங்கை - தாய்லாந்து இடையிலான விமான சேவை உடன்படிக்கையில் துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தாய்லாந்து வௌிவிவகார துணை அமைச்சர் ஆகியோர் கையொப்பமிட்டனர்

இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தாய்லாந்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இன்று கைச்சாத்திடப்பட்டது.