.webp)
Colombo (News 1st) நோயாளர் ஒருவரை பார்ப்பதற்காக வத்தேகம வைத்தியசாலைக்கு சென்ற சிலர், அங்கிருந்த வைத்தியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் வத்தேகம வைத்தியசாலையில் இருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 09 மணியளவில் நால்வர் கொண்ட குழுவினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, வைத்தியருக்கு எதிராக செயற்பட்ட நால்வரும் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.