சீனா 10,000 ரயில் தண்டவாளங்கள் அன்பளிப்பு

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் அன்பளிப்பு

by Bella Dalima 22-09-2023 | 2:58 PM

Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை பிரதான ரயில் மார்க்கத்தில் மஹவ முதல் கொழும்பு வரையிலான வளைவுகளுடன் கூடிய இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் பதிவாகுமென அவர் சுட்டிக்காட்டினார். 

பிரதான மார்க்கத்தில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.