கொக்கோவிட்டயில் இளைஞர் கடத்திக் கொலை

கொக்கோவிட்டயில் இளைஞர் கடத்திக் கொலை

by Bella Dalima 22-09-2023 | 3:10 PM

Colombo (News 1st) குருவிட்ட - கொக்கோவிட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு, தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரை கடத்திச்சென்று வீடொன்றினுள் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த முறைபாட்டிற்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது குறித்த இளைஞர், வீட்டின் அருகிலிருந்த வனப்பகுதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து அவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.

கொக்கோவிட்ட - பரகடுவ பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவரே தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இரும்புப் பொல்லால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.