போர்க்கப்பல்களில் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்தியா

சீனாவை எதிர்கொள்ள போர்க்கப்பல்களில் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்தியா

by Bella Dalima 22-09-2023 | 7:03 PM

Colombo (News 1st) இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வருகின்ற  நிலையில், கம்போடியாவின் Ream என்ற இடத்திலும் கடற்படைத் தளத்தை அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாக The Hindu செய்தி வௌியிடுள்ளது.

ஆப்பிரிக்காவின் Djibouti, பாகிஸ்தானில் கராச்சி, Gwadar ஆகிய பகுதிகளில் சீன கடற்படைத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா 355 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருவாகி வருவதாக The Hindu செய்தி வௌியிடுள்ளது.

அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சீனாவின் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 555-ஆக அதிகரிக்கும் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, 2 இலட்சம்  கோடி செலவில்  68 போர்க்கப்பல்களை  தயாரிப்பதற்கு இந்திய கடற்படை  முன்பதிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2035 ஆம் ஆண்டளவில் இந்திய கடற்படையில் ஆகக்குறைந்தது 175 போர்க்கப்பல்கள் காணப்பட வேண்டும் என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது