.webp)
Colombo (News 1st) திருகோணமலை - அக்போபுர ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.
இதன்போது 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயிலின் ஒரு பெட்டி தண்டாவாளத்திலிருந்து விலகி கவிழ்ந்துள்ளது. 4 பெட்டிகள் கொண்ட ரயிலில் 2 ஆவது பெட்டியே தடம்புரண்டுள்ளது.
இன்று பகல் 1. 15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 9 பெண்களும் 5 ஆண்களும் 2 சிறுவர்களும் காயமடைந்துள்ளதுடன்,
கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ரயில் கட்டுப்பாட்டாளரும் உப கட்டுப்பாட்டாளரும் உள்ளடங்குகின்றனர்.
தடம்புரண்ட ரயிலை வழமைக்கு கொண்டு வருவதற்கு இன்னும் சில நாட்கள் செல்லும் என ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொழும்பு - திருகோணமலை வரையான ரயில் சேவை கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.