165 இலட்சம் ரூபா மோசடி; பெண் கைது

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 165 இலட்சம் ரூபா மோசடி; பெண் கைது

by Bella Dalima 09-12-2023 | 4:35 PM

Colombo (News 1st) தென் கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 165 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கந்தானையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. 

தென் கொரியாவில் வெல்டிங் (Welding) பிரிவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, அவர் நாட்டின் பல பகுதிகளிலும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

44 வயதான குறித்த பெண், 5  இலட்சம் ரூபா முதல் 20 இலட்சம் ரூபா வரை ஒவ்வொருவரிடமும் மோசடி செய்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவங்கள் தொடர்பில் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பணியகம் கூறியுள்ளது.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.