.webp)
-555122.jpg)
Colombo (News 1st) மட்டக்களப்பு - நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு(01) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, கண்டி - பல்லேகல, பலகொல்ல பகுதியில் இன்று(02) காலை பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 12-இல் கல்வி பயிலும் மாணவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து கொத்மலை நோக்கி பயணித்த போது, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தின் காரணமாக விபத்து நேர்ந்துள்ளது.
கெரண்டி எல்ல பகுதியில் வேன் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
