புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 30-11-2023 | 10:59 AM

Colombo (News 1st) மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா கடலில் மூழ்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

புன்னக்குடா கடற்கரையில் நேற்று முன்தினம்(28) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 வயது சிறுவனொருவர் காணாமல் போயிருந்தார்.

காணாமல் போன சிறுவனின் சடலம் நேற்று(29) மாலை களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஜெகன் லதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை  சம்பூர் - தொடுவான் குளத்தில் நீராடச்சென்ற ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

தோப்பூர் - பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.