.webp)
Colombo (News 1st) இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு கடத்திச்செல்லப்பட்ட 08 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சுங்கத்துறை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பாம்பன் - முந்தல்முனை கடற்கரையில் நேற்று(29) அதிகாலை முதல் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட முற்பட்ட போது, படகு நிறுத்தாமல் பயணித்ததால் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த படகை சோதனையிட்ட போது அதிலிருந்து 3.50 எடை கொண்ட 25 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், படகு கைப்பற்றப்பட்ட பகுதியிலும் சோதனையிட்ட அதிகாரிகளால் கடலில் மிதந்து கொண்டிருந்த பொதியொன்றிலிருந்து 32 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கிணங்க, மொத்தமாக 08 கிலோ கிராம் எடையுடைய 57 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.