சாதிக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்த 72 வயதான அகிலா திருநாயகி

by Bella Dalima 24-11-2023 | 5:00 PM

Colombo (News 1st) பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் (Masters Athletics Championship) தொடரில், முல்லைத்தீவை சேர்ந்த அகிலா திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார். 

முல்லைத்தீவு - முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலா திருநாயகி ஸ்ரீ வித்யானந்தபவன், ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஆவார். 

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அகிலா திருநாயகி பங்கேற்றிருந்தார். 

இந்த தொடரில், 1500m ஓட்டம் , 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், 800m ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும், 5000m ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.  

பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த அகிலா திருநாயகி சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதனையும்  நிரூபித்துள்ளார். 

 

https://fb.watch/owgMHgTWTr/