சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று(03)

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று(03)

by Staff Writer 03-10-2023 | 9:18 AM

Colombo (News 1st) சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.

''மது பாவனையை தடுப்போம்'' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மது பாவனையினால் இலங்கையில் வருடாந்தம் 18,000 பேர் உயிரிழப்பதாக புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை இன்று(03) மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.