இன்று(13) முதல் வௌி மாகாணங்களுக்கு எரிவாயு

இன்று(13) முதல் வௌி மாகாணங்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோகம்

by Staff Writer 13-07-2022 | 8:07 AM
Colombo (News 1st) இன்று(13) முதல் ஏனைய மாகாணங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 55,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக நிறுவத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். நேற்று(12) இலங்கை வந்தடைந்த 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்கும் பணி இன்று(13) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, அதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.