சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை

by Bella Dalima 03-06-2022 | 8:24 PM
Colombo (News 1st) சிறுவர்கள் சிகிச்சை பெறும் பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கூறினார். எமது நாட்டின் சிறு பிள்ளைகள் சுகயீனமுற்றால் பெற்றோர் நம்பிக்கையுடன் இந்த வைத்தியசாலைக்கே அவர்களை அழைத்துச் செல்கின்றனர். முன்னைய விலையில் உணவை வழங்க முடியாது என இதுவரை வைத்தியசாலைக்கு உணவு விநியோகித்தவர்கள் கூறியுள்ளமையினால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு மீன், இறைச்சி , முட்டை கிடைப்பதில்லை. இதனால் வைத்தியசாலைகளில் உள்ள சிறுவர்களுக்கு வீடுகளில் இருந்தே உணவைக் கொண்டு வருகின்றனர்.