1000 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில்...

உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில்...

by Staff Writer 29-03-2022 | 9:55 AM
Colombo (News 1st) அரிசி, சீனி, பருப்பு, மிளகாய் ஆகிய பொருட்கள் அடங்கிய மேலும் ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மேலதிக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு டொலர் பற்றாக்குறை தடையாகவுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், போதியளவு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிஹால் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.