மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் தீக்கிரை

by Staff Writer 29-01-2022 | 7:41 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மாமாங்கம் பகுதியில் இன்று (29) அதிகாலை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது. சம்பவத்தில் வர்த்தக நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர் குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்படுவதற்காக எரிவாயு சிலிண்டர்கள் இருந்த நிலையில், எரிவாயு கசிவினால் சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.