சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சை மாதங்களில் மாற்றம் 

by Staff Writer 04-05-2021 | 11:30 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் கல்விப் பொதுத் தராதர உயர் தர (A/L) பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.