.webp)

Colombo (News 1st) இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானி, ஜெனரல் உபேந்திர திவேதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(06) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்து - இலங்கை இருதரப்பு பாதுகாப்பு பங்களிப்புகளை தொடர்ந்தும் வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
இந்த விஜயத்தில் ஜெனரலின் மனைவியும் இணைந்து கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானியை இலங்கை இராணுவ பணிக்குழாம் பிரதானி, ஜெனரல் D.K.S.K.தொலகே மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யங்ஜல் பாண்டே ஆகியோர் வரவேற்றிருந்தனர்.
இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானி, ஜெனரல் உபேந்திர திவேதி இன்று(07) பாதுகாப்பு பிரதியமைச்சர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பயிற்சி ஒத்துழைப்புகள், வலயத்தின் பாதுகாப்பு தொடர்பாடன விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இருநாடுகளின் இராணுவத்தினரிடையே தொழில்முறை தகவல் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
