by Staff Writer 14-09-2020 | 6:19 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவர் தெரிவுக்காக இன்றைய (14) செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ருவன் விஜேவர்தனவிற்கு 28 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த பதவிக்கு போட்டியிட்ட ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.
இதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிப்பார் என இன்றைய செயற்குழு கூட்டத்தின் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.