.webp)

Colombo (News 1st) இவ்வருடத்தின் முதல் 03 மாதங்களில் 19,600 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மாத்திரம் சுமார் 6,233 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதில் தனியார் மற்றும் வணிக வாகனங்கள் உள்ளடங்குவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் வாகன இறக்குமதி செலவு 900 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
