இந்திய துணை ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

இந்திய துணை ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

by Staff Writer 19-04-2026 | 6:55 PM

Colombo (News 1st) இந்திய துணை ஜனாதிபதி C.P. இராதாகிருஷ்ணன், 02 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(19) காலை நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய துணை ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வரவேற்றார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்திய துணை ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.