.webp)
-614512-555420.jpg)
Colombo (News 1st) கடற்படையினரால் முற்றுகையிடப்பட்ட பலநாள் மீன்பிடி படகிலிருந்து 400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த பலநாள் மீன்பிடி படகில் 06 பொதிகளில் பொதியிடப்பட்ட 150 பைக்கற்றுக்களில் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவதாக கடற்படை தெரிவித்தது.
கடற்படையின் நீண்டதூர செயற்பாட்டு கப்பலில்
இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறிதத பலநாள் மீன்பிடி படகு முற்றுகையிடப்பட்டது.
குறித்த பலநாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த மீன்பிடி படகு
கடந்த 30ஆம் திகதி நில்வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்றதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுடன் பயணித்த பல நாள் மீன்பிடி படகு நேற்று(17) இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் முற்றுகையிடப்பட்டது.
