03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

இன்று முதல் 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 24-02-2026 | 3:13 PM

Colombo (News 1st) கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று(24) முதல் 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டார்.

இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், சமூகப் பொலிஸ் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது நாட்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 889 டெங்கு நோயாளர்களும் நாடளாவிய ரீதியில் 12,165 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.