வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர்

வெலிகம பிரதேச சபை தவிசாளராக NPP சட்டத்தரணி சிந்தக தர்ஷன தெரிவு

by Staff Writer 02-02-2026 | 3:05 PM

Colombo (News 1st) வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி சிந்தக தர்ஷன ஹேவாபதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆதரவாக 22 வாக்குகளை பெற்ற அவருக்கு எதிராக 21 வாக்குகள் அளிக்கப்பட்டன. 

02 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இருசந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கோரம் இன்மையால் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.  

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்கிரமசேகர, 04 மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து அந்த பதவி வெற்றிடமாகியிருந்தது.