.webp)
-553173.jpg)
Colombo (News 1st)- இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அனர்த்தங்களால் முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈடாக 50 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பதுளை - ஸ்பிரிங்வெலி தோட்டத்திற்கு செல்லும் வீதிக்கு கார்பர்ட் இடும் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே இதனை குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் இருந்த மக்களுக்கு 10 பேர்சஸ் காணி வழங்கி 550 சதுர அடியில் வீடும் கட்டிக்கொடுப்போம். அதனையும் செய்வோம். அதற்கும் தயாராகவுள்ளோம் எனவும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன கூறினார்.
