தெற்கு கடலில் 6 சந்தேகநபர்கள் கைது

போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது

by Chandrasekaram Chandravadani 20-11-2025 | 12:56 PM

Colombo (News 1st) நாட்டின் தெற்கு ஆழ்கடலினூடாக போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நீண்ட நாள் மீன் படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகு கரைக்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

இந்த மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.