முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 வரை ஒத்திவைப்பு

by Staff Writer 29-10-2025 | 3:35 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(29) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2023 செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் 166 இலட்சம் ரூபா அரசாங்க நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட வௌிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்படட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.