பஸ் - லொறி மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

பஸ் - லொறி மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

by Staff Writer 05-10-2025 | 1:40 PM

Colombo (News 1st) நாரம்மல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் லொறி ஆகியன ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குருணாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியில் பயணித்த 02 சிறுவர்கள், 02 பெண்கள் உள்ளிட்ட 06 பேர் காயமடைந்த நிலையில் குருணாகல் மற்றும் நாரம்மல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லொறியின் சாரதி மற்றும் லொறியில் பயணித்த ஆண், பெண் ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 09 வயதுகளையுடைய 02 சிறுமிகள் தொடர்ந்தும் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.