.webp)
Colombo (News 1st) மத்திய கலாசார நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின்றி 8,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் மத விவகார பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.
குறித்த குழுவின் இறுதி அறிக்கையின் பின்னர் பொதுநிதியை முறைகேடாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் கூறினார்.