8,9ஆவது பாராளுமன்ற கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம்

8,9 ஆவது பாராளுமன்ற கணக்காய்வு அறிக்கைகளை சபாநாயகரிடம் கையளிக்க திட்டம்..

by Staff Writer 06-08-2025 | 1:18 PM

 08ஆவது மற்றும் 09ஆவது பாராளுமன்றங்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் நடத்திய விசேட கணக்காய்வுகள் சபாநாயகரிடம் இம்மாதம் கையளிக்கப்படவுள்ளன.

சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவின் ஆலோசனைக்கமைய பாராளுமன்றத்தின் விசேட கணக்காய்வு முதன்முறையாக நடத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

பாராளுமன்ற கொள்முதல் நடைமுறைகள், வாகன பயன்பாடுகள், அதிகாரிகள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் வௌிநாட்டு பயணங்கள் ஆகியன கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை செலுத்துதல் தொடர்பில் விசேட கணக்காய்வுகளின் போது ஆய்வு செய்யப்படுமெனவும் சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.