.webp)
Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று(06) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல கிரிஇப்பன்வெவ பகுதியிலுள்ள காணியொன்றில் அத்துமீறி நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் 2022 மே 09ஆம் திகதி மக்கள் போராட்ட காலப்பகுதியில் வீடுகளுக்கு சேதமேற்படுத்தப்பட்ட பின்னர் அந்த சொத்துக்களுக்காக இழப்பீடு பெற்றுக்கொண்ட சம்பவத்தின் சந்தேகநபராக அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த சொத்துக்கள் மகாவலி அதிகார சபைக்கு என தெரிவித்து இழப்பீடு வழங்க மறுத்த சில அரச அதிகாரிகளை தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்தமை, இழப்பீட்டை பெற்றுக்கொண்டமையால் ஊழல் என்ற குற்றத்தை இழைத்துள்ளமை, சதித்திட்டம் தீட்டியமை மற்றும் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.