மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று..

மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று..

by Staff Writer 06-08-2025 | 12:56 PM

இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு  மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(06) நடைபெறவுள்ளது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இலங்கை மின்சார சட்டம் 2024 ஆம் ஆண்டு திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட போது அதனை 12 நிறுவனங்களாக பிரித்து மறுசீரமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

புதிய சட்டமூலத்தின் ஊடாக குறித்த யோசனையை நீக்கி, 05 அரச நிறுவனங்களின் கீழ் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை திருத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுமக்களின் கருத்துக்கணிப்பை பெற்றுக்கொள்வது அவசியமென உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்திற்கமைய தேவையான திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இன்று(06) சமர்பிக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்தது.