இவ்வருடத்தில் 133,678 வாகனங்கள் பதிவு..

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 133,678 வாகனங்கள் பதிவு..

by Staff Writer 06-08-2025 | 1:16 PM

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 133,678 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றில் அதிகபட்சமாக 100,451 மோட்டார் சைக்கிள்களும், 20,535 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1293 முச்சக்கரவண்டிகளும், பொருட்கள் - பயணிகளை ஏற்றிச் செல்லும் இரட்டை  பயன்பாட்டுக்குரிய 1995  வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததிலிருந்து வாகன பதிவுகள் அதிகரித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.