Colombo (News 1st) அமெரிக்க தலையீட்டில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தினால் நேற்று(01) காஸா பிராந்தியத்தில் பாரிய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,
இந்த தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.