நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள்..

காலிமுகத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியவர்களின் பட்டியல் வௌியானது

by Chandrasekaram Chandravadani 30-09-2024 | 4:52 PM

Colombo (News 1st) காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கையை வௌியிட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட பணிக் குழாத்தினருக்காக வழங்கப்பட்டவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அடங்குகின்றன.

அவ்வாறு வழங்கப்பட்டிருந்த 107 வாகனங்களின் வகைகள் மற்றும் அவற்றை பயன்படுத்திய நபர்கள் தொடர்பான தகவல்கள் என்பன அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.