Colombo News1st) நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
அஞ்சலோ மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
Ajaz Patel 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 309 ஓட்டங்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 275 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் 4 விக்கெட்கள் 96 ஓட்டங்களுக்குள் சரிந்தது.
கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
Tom Latham 28 ஓட்டங்களையும் Tom Blundell 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
இன்றைய நாள் போட்டி ஆரம்பமாகும் போது நியூசிலாந்து அணி 68 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை குவித்திருந்தது.
நியூசிலாந்து இன்னிங்ஸின் 9ஆவது விக்கெட்டாக ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பிரபாத் ஜயசூரிய 68 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதற்கமைய 275 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியால் 71 ஓவர்களில் 211 ஒட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.