Colombo (News 1st) நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் திமுத் கருணாரத்ன, பெத்தும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், பிரபாத் ஜயசூரிய ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
நாளை மறுதினம்(18) ஆரம்பமாகும் தொடரின் இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.