Colombo (News 1st) கேகாலை மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பை மேற்கொள்வது தொடர்பான ஆய்வுகள் நாளை(20) மேற்கொள்ளப்படவுள்ளன.
ருவன்வெல்ல பிரதேச செயலகத்தினூடாக இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது மீன்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள் மற்றும் நீர் மாதிரிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன.
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் பேராசிரியர் நிரோஷன் வல்பிட்டவின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.