.webp)
Colombo (News 1st) நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். வழக்கு இன்று(24) மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.