அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்க

இருபதுக்கு20 அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்க

by Rajalingam Thrisanno 11-07-2024 | 8:03 PM

இலங்கை இருபதுக்கு20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து வனிந்து ஹசரங்க  விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகி சாதாரண வீரராக அணியில் இடம்பெற தாம் தீர்மானித்தமை இலங்கை கிரிக்கெட்டுக்கு நன்மை பயக்கும் என்று வனிந்து ஹசரங்க கூறியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் இந்தத் தொடரில் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு20 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் சர்வதேச இருபதுக்கு20 தொடரின் 3 போட்டிகளும் கண்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெறவுள்ளன.

3 சர்வதேச ஒருநாள் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்