Colombo (News 1st) ஈரானின் சீர்திருத்தப் படையை(IRGC) பயங்கரவாத அமைப்பாக கனடா பட்டியலிட்டுள்ளது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் ஈரானியர்கள் சிலரதும் பல வருட அழுத்தங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியமான சாதனம் இதுவென இந்த முடிவை அறிவித்த கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc குறிப்பிட்டார்.
இந்த தடையின் மூலம் ஈரானிய சீர்திருத்தப் படையின் அதிகாரிகள் உள்ளிட்ட ஈரான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோருக்கு கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.