இலங்கை - நேபாளம் இடையிலான போட்டி கைவிடப்பட்டது

இலங்கை - நேபாளம் இடையிலான போட்டி கைவிடப்பட்டது

by Staff Writer 12-06-2024 | 6:03 AM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் இன்று(12) காலை ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் கனடாவுடனான நேற்றைய(11) போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.

Aaron Johnson 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் Mohammad Amir மற்றும் Haris Rauf தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரமிழந்து வெற்றியிலக்கை கடந்தது.

Mohammad Rizwan 53 ஓட்டங்களையும் அணித்தலைவர் Babar Azam 33 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுசேர்த்தனர்.

 

 

ஏனைய செய்திகள்