ஒருதொகை போதைப்பொருட்களுடன் மூவர் கைது

30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது

by Staff Writer 10-06-2024 | 2:36 PM

Colombo (News 1st) கெஸ்பேவ பகுதியில் சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 3 சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 13 கிலோ 106 கிராம் ஹெரோயின், 164 கிராம் ஹஷீஸ் போதைப்பொருள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 2 கார்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'அஹுங்கல்லே லொக்கு பெட்டி' உடன் இணைந்து செயற்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரவில, பாதுக்க மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.