T20 தொடர் ; நேபாளத்தை தோற்கடித்த நெதர்லாந்து

T20 உலகக் கிண்ணம் ; நேபாளத்திற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 6 விக்கெட்களால் வெற்றி

by Staff Writer 05-06-2024 | 11:21 AM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அமெரிக்காவின் Dallas மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி, 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் Rohit Paudel 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

பந்துவீச்சில் Tim Pringle மற்றும் Logan van Beek தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

107 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

Max O'Dowd ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்.