மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு பல வெற்றிகள்

மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு பல வெற்றிகள்

by Bella Dalima 01-06-2024 | 10:33 PM

Colombo (News 1st) மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று இலங்கைக்கு பல வெற்றிகள் கிடைத்தன.

கடந்த சில வாரங்களாக இலங்கையின் மெய்வல்லுநர் வீரர்கள் பல வெற்றிகளை நாட்டிற்கு பெற்றுக்கொடுத்தனர்.

தருஷி கருணாரத்ன உள்ளிட்ட இலங்கையின் மெய்வல்லுநர் வீர வீராங்கனைகள் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இன்று பல வெற்றிகளை பதிவு செய்தனர்.

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகள் தாய்வானின் தாய்பேயில் நடைபெறுகின்றது.

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பாக தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் பங்கேற்றனர்.

52.48 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த தருஷி கருணாரத்ன முதலிடம் பெற்றார்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவர் பதிவு செய்த சிறந்த வெற்றி இதுவாகும்.

53.93 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க நான்காம் இடத்தை பெற்றார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியின் வெற்றி இலங்கையின் அருண தர்ஷன வசமானது.

அவர் 45.82 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்தார்.

இலங்கையின் கயந்திக்கா அபேரத்ன 1500  மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.

அவர் 4 நிமிடங்கள் 24.66 விநாடிகளில் போட்டித் தூரத்தை கடந்தார்.