பிரேசிலில் வரலாறு காணாத கனமழை; 100 பேர் பலி

பிரேசிலில் வரலாறு காணாத கனமழை; 100 பேர் பலி, 130 பேரை காணவில்லை, 2 இலட்சம் பேர் இடம்பெயர்வு

by Bella Dalima 09-05-2024 | 4:07 PM

Brazil: பிரேசிலில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தங்களில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். 

காணாமற்போயுள்ள 130 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இரண்டு இலட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளனர். 

தெற்கு பிரேசிலில் பெருக்கெடுத்த நதிகளால் அணைகள் உடைப்பெடுத்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளது. 

ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வரலாறு காணாத மிக மோசமான இயற்கை பேரிடர் என அதிகாரிகள் விபரித்துள்ளனர். 

ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாநிலத் தலைநகரான Porto Alegre மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் கூட மீட்புக்குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

1.3 மில்லியன் மக்கள் வசிக்கும் Porto Alegre  நகரம் வெள்ளத்தால் கிட்டத்தட்ட முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் 904 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.